விவேகானந்த பூங்காவானது மனதை நல்வழிப்படுத்தும் நல்ல சிந்தனைகளையும், மன மகிழ்வையும் இளைய சமுதாயத்திற்கு வழங்கி அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுவதுடன், எமது மாவட்டத்தின் ஆன்மீக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இயற்கையுடன் கூடிய ஒரு சுற்றுலா மையமாகவும் அமையவுள்ளது.
இப் பூங்காவானது தற்போது ஜக்கிய இராச்சியத்தில் வசிக்கும் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தினைச் சேர்ந்த மட்/சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் முயற்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்டு, அவர் 1996ஆம் ஆண்டு ஸ்தாபித்த சமூக நலன்புரி அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் அழகு நிறைந்த பூங்காவுடனும், சுவாமி விவேகானந்தரின் 30 அடி உயரமான திருவுருவச் சிலையுடனும் 3½ ஏக்கர் பரப்பான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப் பூங்காவானது கடந்த 2024.08.25ஆம் திகதி ராமகிருஷ்ண மிஷன் சுவாமிஜிக்களிளால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தர்
சகோதரி நிவேதிதா
சுவாமி விபுலானந்தர்
சுவாமி நடராஜானந்தர்
சுவாமி ஜீவனானந்தர்
திரு. க. சற்குணேஸ்வரன்
ஸ்தாபகர்
விவேகானந்த பூங்கா
சுவாமி விவேகானந்தரின் 450 அறிவுரைகள்
சுவாமி விவேகானந்தர் மறைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது 35வது வயதில் கூறிய வார்த்தைகள் !
அன்பர்களே! நான் இன்னும் நான்கு ஆண்டு காலம் மட்டுமே இப் பணிகளைச் செய்வேன். அதன் பின்னர் என் ஆத்மா இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்றுவிடும். அதற்குள் நான் செய்யவேண்டிய பணிகளை விரைவாகவும், உறுதியாகவும் செய்ய வேண்டும். என் மறைவிற்கு பிறகும் என் வார்த்தைகளிலும், உபதேசங்களிலும் நான் உயிர் வாழ்ந்துகொண்டே இருப்பேன்.