Kalpataru Day & New year Celebration 1st January 2025 at Vivekananda Park












வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்கள் எமது விவேகானந்த பூங்காவிற்கு இன்று விஐயம் மேற்கொண்டிருந்தார்.
எமது swo நிறுவனத்தினால் அன்னையர் தினத்தை முன்னிட்டு 75 தாய்மாருக்கு புதிய உடைகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நிறுவன கௌரவ தலைவர் திருமதி தயனி கிருஷ்ணாகரன் அவர்களின் தலைமையில் இன்று எமது விவேகானந்த பூங்காவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்தில் பல உதவிகள் வழங்கிய சுவிஸ் நாட்டில் வசிக்கும் பாண்டிருப்பை சேர்ந்த திரு.திருமதி விஐயகுமாரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இப் பணிக்காக நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
உலகலாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைத்தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களுடன் மேலும் பல சுவாமிஜிக்கள் இன்றைய தினம் எமது விவேகானந்த பூங்காவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
விவேகானந்த பூங்கா பணிக்கு உதவி வழங்குகின்றவர்களை அல்லது அவர்களது பெற்றோர்களை விசேட தினங்களில் கெளரவிப்போம் !
எமது விவேகானந்த பூங்காவிற்கு நீர் தாங்கி அமைத்துக் கொடுத்து நீர் இணைப்பு வசதியினை ஏற்படுத்திக் கொடுத்த ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் பெரும்தகை திரு.சர்மா குமரேசன் அவர்களின் துணைவியார் திருமதி.அபிராமி சர்மா குமரேசன் அவர்கள் இன்றைய தினம் எமது விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் மேற்கொண்டிருந்தார்.